வலையில் கண்டது:
நன்றி: முத்தமிழ் மன்றம்
குறிக்கோள் இல்லாத வாழ்க்கை, 
முட்கள் இல்லாத கடிகாரம் போன்றது. 
அது நின்றாலும், ஓடினாலும் பயனில்லை.
-----------------------------------------------------------------------------------
மண்ணில் விழுவது தப்பில்லை, 
ஆனால் விதையாக விழுந்து, 
மரமாக எழு.
-----------------------------------------------------------------------------------
வெற்றி வந்தால் நம்பிக்கை வரும். 
ஆனால் நம்பிக்கை இருந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும். 
அதனால் நம்பிக்கையை வளர்த்துக்கொள்.
-----------------------------------------------------------------------------------
உன் வெற்றிகளை எண்ணி பார்க்காதே! 
உன் தோல்விகளை மட்டும் எண்ணிப்பார். 
வெற்றியை விட உயர்ந்தது தோல்விகள் தான்...
-----------------------------------------------------------------------------------
மாலையில் மரணமென்று தெரிந்தும் 
காலையில் அழுவதில்லை மலர்கள். 
நீ மட்டும் சோகங்களை நினைத்து 
வாடுவதா அழகு?
-----------------------------------------------------------------------------------
நான் அமைதியை விரும்புகிறேன். 
இதில் 
நான் - அகந்தை
விரும்புதல் - ஆசை 
இரண்டையும் விட்டொழி. 
-----------------------------------------------------------------------------------
மீதமிருப்பது “அமைதி” - அது உனக்கே.
எப்போதும் அடக்கமாயிரு, 
எல்லாமிருந்தும் அமைதியாக 
இருக்கும் நூலகம் போல.
-----------------------------------------------------------------------------------
வெற்றி என்பது உன் நிழல் போல.
நீ அதை தேடிப்போகவேண்டியதில்லை. 
நீ வெளிச்சத்தை நோக்கி நடக்கும் போது உன்னுடன் வரும்.
-----------------------------------------------------------------------------------
லட்சியமும் அதற்கான வழிமுறைவகுப்பதும், சாலை வரைபடம் போல. 
சாலை வரைபடம் உங்கள் பயணம் சுலபமான, இனிமையானதாக இருக்க உதவாது. 
ஆனால் அது உங்களது பயணத்தின் சரியான பாதையாக இருக்கும். 
போராடினால் இறுதியில் வெற்றியே கிடைக்கும். 
-----------------------------------------------------------------------------------
நண்பனையும் நேசி, 
எதிரியையும் நேசி. 
உன் வெற்றிக்கு துணை நிற்பவன் - நண்பன். 
உன் வெற்றிக்கு காரணமானவன் - உன் எதிரி..
-----------------------------------------------------------------------------------
உங்கள் ஈடுபாடில்லாத எந்த காரியத்திலும் ஜெயிக்க முடியாது. 
ஈடுபாடுடன் செய்யும் எந்த காரியமும் தோற்காது. 
-----------------------------------------------------------------------------------
சாதாரண மனிதன் விழித்திருக்கும் போதும் தூங்குகிறான். 
சாதிக்கப்பிறந்தவன் தூங்கும் போதும் விழித்திருக்கிறான். - இதில் நீ யார்?
-----------------------------------------------------------------------------------
பயணத்தின்போது செல்போனை பயன்படுத்தாதே. 
எதிர்முனையில் அழைப்பது எமனாகக் கூட இருக்கலாம்!
-----------------------------------------------------------------------------------
தவறுகள் அனுபவங்களை கொடுக்கும். 
அனுபவங்கள் தவறுகளை குறைக்கும்.
-----------------------------------------------------------------------------------
நீ மேலே உயரும்போது 
நீ யாரென்று நண்பர்கள் அறிவார்கள். 
-----------------------------------------------------------------------------------
ஆனால் நீ கீழே போகும்போது 
உண்மையான நண்பர்களை நீ அறிவாய்...
-----------------------------------------------------------------------------------
ஒருவர் உன்னைத் தாழ்த்தி பேசும் போது 
ஊமையாய் இரு. 
-----------------------------------------------------------------------------------
புகழ்ந்து பேசும் போது 
செவிடனாய் இரு. 
எளிதில் வெற்றி பெறலாம்.
-----------------------------------------------------------------------------------
இயற்கை உனக்கு ஏராளமான சோதனைகளை தந்திருக்கும். 
இயற்கைக்கு தெரியும் அந்த சோதனைகளை உன்னால் மட்டுமே முறியடிக்க முடியுமென. 
உனக்கும் தெரியுமா? முயன்று பார், முடியாது எதுவுமில்லை.
-----------------------------------------------------------------------------------
துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்துவிடு. 
அது கற்று தந்த பாடத்தை மறந்துவிடாதே!
-----------------------------------------------------------------------------------
உணரும் வரையில் உண்மையும் ஒரு பொய்தான். 
புரிகிற வரையில் வாழ்க்கையும் ஒரு புதிர்தான்...
-----------------------------------------------------------------------------------
காசுதான் சத்தம் போடும், 
பணம்(நோட்டு) அமைதியாகவே இருக்கும். 
நீயும் உன் மதிப்பை உயர்த்திக்கொள்.
-----------------------------------------------------------------------------------
உன் கண்களில் இனிமை இருந்தால் 
உன்னால் இவ்வுலகின் எல்லா மனிதர்களையும் நேசிக்க முடியும். 
-----------------------------------------------------------------------------------
உன் நாவில் (பேச்சில்) இனிமை இருந்தால் 
எல்லா மனிதர்களும் உன்னை நேசிக்க முடியும் - அன்னை தெரசா 
-----------------------------------------------------------------------------------
பிறக்கும்போதே யாரும் 
மகிழ்ச்சியாய் பிறப்பதில்லை. 
ஆனால் மகிழ்ச்சியாய் வாழும் 
தகுதியுடனேயே பிறக்கிறார்கள். 
உன் மகிழ்ச்சியை ஏற்படுத்திக்கொள்ள நீயே முயற்சி செய்.
-----------------------------------------------------------------------------------
எழுந்து நடந்தால் இமயமலையும் நமக்கு வழி கொடுக்கும் 
உறங்கிக்கிடந்தால் சிலந்தி வலையும் நம்மை சிறை பிடிக்கும்.
-----------------------------------------------------------------------------------
காயமில்லாமல் கனவுகள் காணலாம் 
ஆனால் வலி இல்லாமல் வெற்றிகள் காண முடியாது.
-----------------------------------------------------------------------------------
உயரத்தில் செல்ல உயரத்தில் உள்ளவர்களை நோக்கிடு 
உயரத்தில் சென்று தாழ்வில் உள்வர்களை நோக்கிடு
-----------------------------------------------------------------------------------
தோல்வி வந்தால் பொறுமை தேவை 
வெற்றி வந்தால் பணிவு தேவை 
எதிர்ப்பு வந்தால் துணிவு தேவை..
-----------------------------------------------------------------------------------
உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி உன் செயல்கள் இருக்கும்; 
உன் செயல்களுக்கு ஏற்றபடி உன் வாழ்க்கை இருக்கும் ---------------- சாக்ரடீஸ்
-----------------------------------------------------------------------------------
முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை! 
முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை! 
முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை!
-----------------------------------------------------------------------------------
தோல்வி அடைவதற்க்கு பல வழிகள் இருக்கலாம். 
எனினும் உழைப்புதான் வெற்றி பெற ஒரே ஒரு வழி.
-----------------------------------------------------------------------------------
Sunday, 24 February 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Top 10 Casino Sites for Live Dealer Games
Live Dealer Casinos. Live dealer casinos are very popular. 스포츠 무료중계 Many casino game suppliers are offering live dealer games, 일반인 후방 but many have 슬롯 커뮤니티 limited Can you make money 토토꽁머니 live casino games?Does Live Dealer games 1xbet 먹튀 in
Post a Comment