Wednesday 9 January 2008

தோல்வி கண்டு துவண்டுவிடுபவன் மனிதனா?

வாழ்வில் ஒவ்வொருவரும் தோல்வியை சந்திக்க கற்றுக்கொள்ள வேண்டும்। தோல்வி என்றாலே துவண்டு விடும் மக்களைத்தான் நான் அதிகமாக பார்த்து இருக்கின்றேன்.
அவர்கள் ஒவ்வொருவரும், தாங்கள் என்ன முயன்றார்களோ

அதுவே கிடைத்தாக வேண்டும்...

தோல்வி என்பதே இருக்கக் கூடாது.....


இதுதான் மக்கள் எதிர் பார்க்கிறார்கள்.

வாழ்க்கை என்பது போராட்டாங்கள் நிறைந்தது. போர்க்களத்தில் நாம் இறங்கி விட்டால் எதிர்க் காற்று பலமாக வீசும். இவை எல்லாம் பார்த்து துவண்டு விட்டால் என்ன சாதிக்க முடியும்.
சாதாரண குட்டையில் நீச்சல் போட்டவன் கடலில் என்ன செய்ய முடியும். இந்த குட்டையில் நீச்சல் பயின்ற ஒருவனுக்கும் கடலில் நீச்சல் பயின்ற ஒருவனுக்கும் நீச்சல் போட்டி வந்தால் யார் ஜெயிப்பார்கள் என்பதை நீங்களே புரிந்து கொள்ளலாம்.
சிற்பங்களை கண்டு வியப்புடன் பூரித்து நிற்கின்றான்... அதே சிற்பம் வைக்கப் பட்டு இருக்கும் ஒரு கல்லை அவன் சட்டை செய்வது கூட கிடையாது. காரணம் .....அந்த சிலையாக செதுக்கப் பட்ட கல் நல்ல உளி செதுக்களை தாங்கியது. சிற்பி அந்த கல்லை குடையும் போதும் உளியால் அதை குட்டிய போடும் அது வலியினை தாங்கிய காரணமே.


மனிதர்களில் எத்தனையோ பேர் தனது கடந்த கால வாழ்க்கையை நினைத்து கவலைபட்டவர்களாக இருக்கிறார்கள்। இது போல கடந்த கால வாழ்க்கையை சொல்லிச் சொல்லி புலம்புவதை நாம் நிறைய முறை பார்த்து இருக்கிறோம்.

இப்படி புலம்பிக் கொண்டே இருப்பவர்கள்....
அவர்களது கடந்த காலத்தை மட்டும் வீணடிக்க வில்லை ..
இப்போது இருக்கும் ...
அவர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கும் நிகழ காலத்தையும் வீணடிக்கிறார்கள்.


இப்படிப் பட்டவர்கள் தனது அனைத்து சக்தியும் வீனடிக்கின்றார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இவர்கள் எதிர்காலம் என்று ஒன்று இருப்பதாக நினைப்பதே இல்லை.. இதனால் இவர்கள் தங்களது வாழ்வில் முன்னேறாமல் ஒரு செக்கு மாடு எவ்வாறு இருந்த இடத்திலேயே சுற்றிக் கொண்டு இருக்கின்றதோ.. அது போல இவர்களும் வாழ்வில் முன்னேறாமல் இருப்பார்கள்...

நாம் இவ்வாறான மக்களிடம் இருந்து ஒரு உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும்.அந்த உண்மை கீழ் கண்டவாறு கொடுக்கப்பட்டு இருக்கின்றது...

'நமது கடந்த கால வாழ்க்கை நமக்கு பாடமாக இருக்க வேண்டுமே... தவிர எக்காரணத்தை முன்னிட்டும் நமக்கு பாரமாக இருக்கக் கூடாது"...


எனவே மனிதா.. தோல்விகளை கண்டு மனம் துவளாதே.இன்னும் எதிர்ப்புகளை சந்திக்க தயாராகிக் கொள். சோதனைகளை சாதனைகளாக்க கற்றுக் கொள்.வெற்றி நிச்சயம் உன் பக்கம்.

நன்றி: துறவி Saint

1 comment:

Ganesh said...

its wonderful, super innum niraya contribute pannunga