Thursday 16 October 2008

Thoughts of Vethathiri Maharishi

விரைவில் வேதாத்திரி மகரிஷி அவர்களின்
கருத்துக்கள் இங்கே இடம்பெறும் ....

Monday 14 April 2008

புத்தாண்டு ப‌த்து க‌ட்ட‌ளைக‌ள்

த‌மிழ்ப்புத்தாண்டு ந‌ல்வாழ்த்துக்க‌ள்.

வாழிய‌ செந்த‌மிழ்

புத்தாண்டு ப‌த்து க‌ட்ட‌ளைக‌ள்

1. தேவை / அவ‌சிய‌ம் இல்லாமல் ஆங்கில‌த்திற்கு இட‌மில்லை. த‌மிழில் பேசுத‌ல் இழுக்கு என்று க‌ருதுவ‌து ந‌ம் அழிவுக்கான பாதை.

விளக்க‌ம் : த‌மிழ‌ர் இய‌க்குன‌ர் சீமான்
http://www.youtube.com/watch?v=lcAiBhnzDQk
2. தமிழீழ ம‌க்க‌ளுக்கு ந‌ம்மால் முடிந்த‌ ஆத‌ர‌வு / உத‌வி. ( அவ‌ர்க‌ளை, ந‌ம் சொந்த‌ ச‌கோத‌ர்க‌ளை, த‌மிழ் நாட்டிலேயே ''தீவிர‌வாதிக‌ள்'' என்று சொல்வ‌து ந‌ம‌க்குத்தான் அவ‌மான‌ம்)

3.கோக், பெப்ஸி புற‌க்க‌ணிப்பு. என் ம‌ண்ணின் விவ‌சாயிக‌ள் வாழ, இள‌னீருக்கு ஆத‌ர‌வு.
( என்.ஆர்.ஐ க்க‌ள் தாய‌க‌ம் செல்லும் போது நினைவு கொள்க‌)

4. க‌ருணாநிதி, ஜெய‌லலிதா இருவ‌ருக்கும் இனி வாக்க‌ளிப்ப‌திற்கில்லை. த‌மிழக‌த்திற்கு தேவை, புதிய‌தோர் விடிய‌ல். ச‌ன், ஜெயா வுக்கு முற்றுப்புள்ளி. ( அவ‌ர்க‌ளின் அரை உண்மை, அரை பொய் செய்திக‌ளை இனியும் ந‌ம்புவ‌த‌ற்கில்லை )

5.விஜ‌ய், பேர‌ர‌சு ப‌ட‌ங்க‌ளை இனியும் மெச்சு கொட்டி பார்த்து, ர‌சித்து ?! ந‌ம்மை நாமே ''கேணய‌ன்'' என்று சொல்லிக்கொள்வ‌த‌ற்கில்லை. கேளிக்கைக‌ளில் ஆபாச‌ங்க‌ளை காட்டி ப‌ண‌ம் ப‌றிக்கும் கும்ப‌ல்க‌ளுக்கு இட‌மில்லை.

6.ஊட‌க‌ங்கள் த‌ரும் செய்திக‌ளை அப்ப‌டியே ந‌ம்ப‌ மாட்டோம். ( ஹ‌ர்ப‌ஜ‌ன் விஷ‌ய‌த்தில் அவ‌ர்க‌ள் செய்த‌து கேலிக்கூத்து. 'தேரி மா கி'' என்று சொல்லிய‌ பின்னும் விடுத‌லை ஆன‌தை அவ‌மான‌ப்ப‌டாம‌ல், 'வ‌ன்தே மாத‌ர‌ம்'' சொல்லி அவ‌ர்க‌ள் கொண்டாடிய‌து கேவ‌ல‌ம்) ஒரு விஷ‌ய‌த்தை த‌லைகீழாக‌வே மாற்றிவிட்டார்க‌ள். குறிப்பாக‌ ஸ்டார் நியூஸ்.

7.த‌மிழை நம் அடுத்த‌ த‌லைமுறைக‌ளுக்கு கொண்டு செல்லும் முய‌ற்சிகளுக்கு ந‌ம்மாலான உத‌வி,ஊக்க‌ம்,ஆத‌ர‌வு.

http://tamilnation.org/literature/projectmadurai/intro.htm

8.''இனி ஒரு விதி செய்வோம்; அதை என்னாளும் காப்போம்.''
'' த‌னி ஒரு ம‌னித‌னுக்கு உண‌வில்லையெனில் ஜ‌க‌த்தினை அழித்திடுவோம்''

மாதத்திற்கு ஒரு முறையாவ‌து ந‌ம் ஏழை ம‌க்க‌ளுக்கு ந‌ம்மால் முடின்த‌ உத‌வி / க‌ல்வி / ஒரு வேளை உண‌வு. சொன்த‌ ம‌க்கள் கிராம‌ங்களில் ப‌ட்டினி சாவு கிட‌க்கும் பொழுது நாம் மூச்சு முட்ட மூன்று வேளை திண்று விட்டு தூக்க‌ம் வ‌‌ராம‌ல் புல‌ம்புவ‌து அபத்த‌ம்.
( ப‌ட்டினிச்சாவுக‌ள் எப்ப‌டி நிக‌ழும் என்று ஒரு முறை எண்ணிப்பார்க்க‌வும்)

9.புத்த‌க‌ம் ப‌டிக்கும் ந‌ல்ல‌ ப‌ழக்கங்க‌ளை விட்டு விட்டு ஆர்குட்டிலும், ஃபேஸ்புக்கிலும் ம‌ணிக்க‌ணக்கில் செலவிடுத‌ல் விர‌ய‌ம். ( புத்தக‌ம் ப‌டிக்கிற‌ ப‌ழக்க‌மே இல்லை என்ப‌தை கொஞ்ச‌ம் கூட ச‌ல‌ன‌மில்லாம‌ல் சொல்லும் இன்னொரு த‌லைமுறை உருவாகி வ‌ருவ‌து உண்மை. எல்லாம் வள‌ர்ப்பு முறை !)

11.'ம‌ர‌ம் வ‌ள‌ர்ப்போம்; ம‌ழை பெறுவோம்' இது க‌டமை ஆகி விட்ட‌து.

இனியும் அடுத்த‌வ‌ர்க‌ளை குத்த‌ம் சொல்லி ப‌ய‌னில்லை. நாம் ஒன்றுப‌ட்டு உருவாக்குவ‌து தானே ச‌முதாய‌ம்.மாற்ற‌ங்க‌ள் ந‌ம்மிலிருந்து தொட‌ங்க‌ட்டும்.

வாழிய‌ செந்த‌மிழ். வாழ்க‌ ந‌ற்றமிழ‌ர்.

வாச‌க‌ப்பிழை ம‌ன்னித‌ருளுக !

நன்றி: ப‌ச்சைத்தமிழ‌ன்

Sunday 30 March 2008

அன்புடன்

உண்மையான அன்பைப்
பேச்சின் மூலம்
வெளிப்படுத்த முடியாது
சேவைதான் வெளிப்படுத்தும்

- காந்தியடிகள்.

அன்பு என்பது
வாழ்க்கையில் இருண்ட
மேகங்களின் மீது
தோன்றும் ஒரேயொரு
வானவில்.

- இங்கர்சால்

அன்பினால் நல்லவர்களை
அடக்க வேண்டும். அச்சத்தால்
தீயவர்களை அடக்க வேண்டும்.

- அரீஸ்டாட்டில்.

அன்பு எங்கே உயர்ந்து
விளங்குகிறதோ அங்கே
உரிமைப் போராட்டம் இல்லை.

- வ.உ.சி.,

அன்பு என்பது தானாக வருவது , அதை
எவரும் விலைக்கு வாங்க முடியாது.

- லாங்பெல்லோ

உலகத்திலேயே
மிகவும் மலிவான
பொருள் அன்பு
ஒன்றுதான்.
அத தன்னை
வெறுப்பவனுக்கும்
இன்பத்தைத் தரும்.

- லாங்பெல்லோ

அன்பு இனிமையானது
நிலையானது! விசுவாசம்
நிறைந்தது.

- மார்க் ட்லைன்

அன்பை விற்கவோ வாங்கவோ
முடியாது. அன்பிற்கு அன்பே விலை

- கீட்ஸ்

ஒவ்வொருவரையும் அன்புடன்
நேசியுங்கள். உப்புத் தண்ணீர்
கூட உங்களுக்குச் சர்க்கரையாக
இனிக்கும்.

- சீனம்

Sunday 24 February 2008

நம்பிக்கை தத்துவங்கள் 2

வலையில் கண்டது:
நன்றி: முத்தமிழ் மன்றம்

சோம்பலை சாம்பலாக்கி வேதனையை சாதனையாக்குவோம்
-----------------------------------------------------------------------------------

உனக்குள்ளே உந்தன் பயத்தை பதுக்கிக்கொண்டு,
தைரியத்தை மட்டுமே மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
-----------------------------------------------------------------------------------

தேடும் வரை வாழ்க்கை நிஜம்;
ஓடும் வரை வெற்றி நிஜம்.
-----------------------------------------------------------------------------------

தட்டிப் பறிப்பவன் வாழ்ந்ததில்லை;
விட்டுக் கொடுப்பவன் வீழ்ந்ததில்லை.
-----------------------------------------------------------------------------------

செல்லும் பாதை சரியான பாதையாக இல்லாத பொழுது,
வேகமாக ஓடுவதால் என்ன பலன்?
-----------------------------------------------------------------------------------

வெற்றி என்பது தோல்விகளின் தொகுப்பு.
-----------------------------------------------------------------------------------

இறந்தகால அனுபவங்கள் நிகழ்கால சாதனைகள்.
-----------------------------------------------------------------------------------

கசப்புகளின்றி சாகசம் இல்லை.
-----------------------------------------------------------------------------------

நெருப்புக்கு ஓய்வென்பது அணைவதல்ல, எரிப்பது!
உனக்கு ஓய்வென்பது உறங்குவதல்ல, உழைப்பது!
-----------------------------------------------------------------------------------

கடந்து செல்கிறது நமக்கான வினாடிகள்
நீ கழிக்கப்படுவதற்குள் விழித்துக்கொள்.
-----------------------------------------------------------------------------------

இறந்துபோன ஒன்றுக்கும் உயிரிருக்கிறதென்றால் அது காலத்திற்கு மட்டுமே.
-----------------------------------------------------------------------------------

பாறைகளைச் சந்திக்காவிடில் ஓடைகளுக்குச் சங்கீதம் இல்லை.
-----------------------------------------------------------------------------------

வலைகளின் எண்ணிக்கை அதிகமாவதால்
மீன்களின் எண்ணிக்கைக் குறைந்து போவதில்லை.
-----------------------------------------------------------------------------------

புதைக்கப்படுவதுதான் கல்லறையென்றால்
ஒவ்வொரு மனிதனின் இதயமும் கல்லறைதான்.
-----------------------------------------------------------------------------------

தன் மீது விழும் மண்ணைச்
சுமையென நினைப்பதில்லை விதை.
-----------------------------------------------------------------------------------

காயங்களுக்கு மருந்து வேண்டாம்,
கனிவான பார்வை போதும்.
-----------------------------------------------------------------------------------

எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொள்,
ஏமாற்றத்தால் சோர்வடைய மாட்டாய்.
-----------------------------------------------------------------------------------

படைப்பாளனாய் வேண்டாம்,
நல்ல விமர்சகனாய் இரு.
-----------------------------------------------------------------------------------

வீட்டுக்குள் நடப்பதை வீதிக்கு எடுத்துச் செல்லாதே,
வீதியில் பாதித்தவற்றை வீட்டுக்குக் கொண்டுவா.
-----------------------------------------------------------------------------------

மனிதனாய் இரு மகானாய் வேண்டாம்.
-----------------------------------------------------------------------------------

உன் மீது அன்பானவர்கள்
உன்னை பலமுறை சிரிப்பவைப்பவர்கள் அல்ல.
உன் ஒவ்வொரு அழுகைக்குபின்னும் சிரிக்கவைப்பவர்களே!
-----------------------------------------------------------------------------------

அதிகமாக சிரிக்கும் மனிதனும்
தன் மனதில்
மிகப்பெரிய காயத்தை வைத்திருப்பான். - சார்லி சாப்லின்

எனவே மனதில் எவ்வளவு காயமிருந்தாலும்
எல்லோரிடமும் சிரித்து பழகுங்கள்.
-----------------------------------------------------------------------------------

கோபம் என்பது அடுத்தவர் செய்யும் தவறுக்கு,
உனக்கு நீயே கொடுத்துக்கொள்ளும் தண்டனை.
-----------------------------------------------------------------------------------

வெற்றி என்பது புத்திசாலிகளின் சொத்தல்ல..
அது முன்னேற துடிக்கும் உழைப்பாளிக்கும்,
தன்னம்பிக்கைக்குமே சொந்தம். - ஹிட்லர்
-----------------------------------------------------------------------------------

எளிய வாழ்க்கையும்,
உயர்ந்த எண்ணமும் வாழ்வின் லட்சியமாக இருக்க வேண்டும்.
-----------------------------------------------------------------------------------

உண்மையான பெரிய மனிதனுக்கு முதல் அடையாளமே அடக்கம்தான்.
-----------------------------------------------------------------------------------

அறிவு வளர வளர நம் அறியாமையின் அளவை அறிய முடிகிறது.
-----------------------------------------------------------------------------------

அன்பும், ஆற்றலும் இணைந்து பணியாற்றும் போது
தலைசிறந்த படைப்பை எதிர்பார்க்கலாம்.
-----------------------------------------------------------------------------------

வாழ்க்கையில் முன்னேறும் போதுதான்
நம் திறமையின் அளவுகளை அறிய முடிகிறது.
-----------------------------------------------------------------------------------

நேர்மையான குறிக்கோள், அளவற்ற ஊக்கம்,
தளர்வற்ற நெஞ்சுறுதி, சலியாத உழைப்பு
இவைகளே வெற்றிக்கு வழிகள்.
-----------------------------------------------------------------------------------

எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்தால்
ஏமாற்றங்கள் அதிகமாக இருக்காது!
-----------------------------------------------------------------------------------

பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது...
பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது!
-----------------------------------------------------------------------------------

வெற்றி என்பது நாம் பெற்றுக் கொள்வது,
தோல்வி என்பது நாம் கற்றுக் கொள்வது!
-----------------------------------------------------------------------------------

செயல்கள் எதுவும் நல்லது அல்லது கெட்டது என்று இல்லை .
அதன் அடிப்படையான ஆசை தான் அதை நிர்ணயிக்கிறது.
ஒரு பெரிய தளபதி கூட தோற்க கூடும் .
பாமரன் விவசாயியின் வைராக்கியம் தோற்காது.
-----------------------------------------------------------------------------------

வாழ்வு காலத்தில் நன்மையை செய்...
தாழ்வு காலத்தில் சிந்தனையை செய்!
-----------------------------------------------------------------------------------

நீ புகழை வெறுத்தால் புகழ் உன்னைத் தேடிவரும்.
-----------------------------------------------------------------------------------

நல்ல நண்பனை அடைய விரும்பினால்
நீயும் நல்லவனாக இருக்க வேண்டும்.
-----------------------------------------------------------------------------------

செல்வங்களை விட செல்வாக்கு மேலானது.
-----------------------------------------------------------------------------------

கண்ணாடி வீட்டில் வசிப்பவன்,
அண்டை வீட்டார் மேல் கல் எறியக் கூடாது.
-----------------------------------------------------------------------------------

தொடக்கத்தைவிட முடிவைப் பற்றி அதிகமாக சிந்தனை செய்.
-----------------------------------------------------------------------------------

ஒரு மனிதனின் அழகு அவன் நாவின் இனிமையில் இருக்கிறது.
-----------------------------------------------------------------------------------

நம்பிக்கை தத்துவங்கள் 1

வலையில் கண்டது:
நன்றி: முத்தமிழ் மன்றம்

குறிக்கோள் இல்லாத வாழ்க்கை,
முட்கள் இல்லாத கடிகாரம் போன்றது.
அது நின்றாலும், ஓடினாலும் பயனில்லை.

-----------------------------------------------------------------------------------

மண்ணில் விழுவது தப்பில்லை,
ஆனால் விதையாக விழுந்து,
மரமாக எழு.

-----------------------------------------------------------------------------------

வெற்றி வந்தால் நம்பிக்கை வரும்.
ஆனால் நம்பிக்கை இருந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.
அதனால் நம்பிக்கையை வளர்த்துக்கொள்.
-----------------------------------------------------------------------------------

உன் வெற்றிகளை எண்ணி பார்க்காதே!
உன் தோல்விகளை மட்டும் எண்ணிப்பார்.
வெற்றியை விட உயர்ந்தது தோல்விகள் தான்...
-----------------------------------------------------------------------------------

மாலையில் மரணமென்று தெரிந்தும்
காலையில் அழுவதில்லை மலர்கள்.
நீ மட்டும் சோகங்களை நினைத்து
வாடுவதா அழகு?
-----------------------------------------------------------------------------------

நான் அமைதியை விரும்புகிறேன்.
இதில்
நான் - அகந்தை
விரும்புதல் - ஆசை
இரண்டையும் விட்டொழி.
-----------------------------------------------------------------------------------

மீதமிருப்பது “அமைதி” - அது உனக்கே.

எப்போதும் அடக்கமாயிரு,
எல்லாமிருந்தும் அமைதியாக
இருக்கும் நூலகம் போல.
-----------------------------------------------------------------------------------

வெற்றி என்பது உன் நிழல் போல.
நீ அதை தேடிப்போகவேண்டியதில்லை.
நீ வெளிச்சத்தை நோக்கி நடக்கும் போது உன்னுடன் வரும்.
-----------------------------------------------------------------------------------

லட்சியமும் அதற்கான வழிமுறைவகுப்பதும், சாலை வரைபடம் போல.
சாலை வரைபடம் உங்கள் பயணம் சுலபமான, இனிமையானதாக இருக்க உதவாது.
ஆனால் அது உங்களது பயணத்தின் சரியான பாதையாக இருக்கும்.
போராடினால் இறுதியில் வெற்றியே கிடைக்கும்.
-----------------------------------------------------------------------------------

நண்பனையும் நேசி,
எதிரியையும் நேசி.

உன் வெற்றிக்கு துணை நிற்பவன் - நண்பன்.
உன் வெற்றிக்கு காரணமானவன் - உன் எதிரி..
-----------------------------------------------------------------------------------

உங்கள் ஈடுபாடில்லாத எந்த காரியத்திலும் ஜெயிக்க முடியாது.
ஈடுபாடுடன் செய்யும் எந்த காரியமும் தோற்காது.
-----------------------------------------------------------------------------------

சாதாரண மனிதன் விழித்திருக்கும் போதும் தூங்குகிறான்.
சாதிக்கப்பிறந்தவன் தூங்கும் போதும் விழித்திருக்கிறான். - இதில் நீ யார்?
-----------------------------------------------------------------------------------

பயணத்தின்போது செல்போனை பயன்படுத்தாதே.
எதிர்முனையில் அழைப்பது எமனாகக் கூட இருக்கலாம்!
-----------------------------------------------------------------------------------

தவறுகள் அனுபவங்களை கொடுக்கும்.
அனுபவங்கள் தவறுகளை குறைக்கும்.
-----------------------------------------------------------------------------------

நீ மேலே உயரும்போது
நீ யாரென்று நண்பர்கள் அறிவார்கள்.
-----------------------------------------------------------------------------------

ஆனால் நீ கீழே போகும்போது
உண்மையான நண்பர்களை நீ அறிவாய்...
-----------------------------------------------------------------------------------

ஒருவர் உன்னைத் தாழ்த்தி பேசும் போது
ஊமையாய் இரு.
-----------------------------------------------------------------------------------

புகழ்ந்து பேசும் போது
செவிடனாய் இரு.
எளிதில் வெற்றி பெறலாம்.
-----------------------------------------------------------------------------------

இயற்கை உனக்கு ஏராளமான சோதனைகளை தந்திருக்கும்.
இயற்கைக்கு தெரியும் அந்த சோதனைகளை உன்னால் மட்டுமே முறியடிக்க முடியுமென.
உனக்கும் தெரியுமா? முயன்று பார், முடியாது எதுவுமில்லை.
-----------------------------------------------------------------------------------

துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்துவிடு.
அது கற்று தந்த பாடத்தை மறந்துவிடாதே!
-----------------------------------------------------------------------------------

உணரும் வரையில் உண்மையும் ஒரு பொய்தான்.
புரிகிற வரையில் வாழ்க்கையும் ஒரு புதிர்தான்...
-----------------------------------------------------------------------------------

காசுதான் சத்தம் போடும்,
பணம்(நோட்டு) அமைதியாகவே இருக்கும்.
நீயும் உன் மதிப்பை உயர்த்திக்கொள்.
-----------------------------------------------------------------------------------

உன் கண்களில் இனிமை இருந்தால்
உன்னால் இவ்வுலகின் எல்லா மனிதர்களையும் நேசிக்க முடியும்.
-----------------------------------------------------------------------------------

உன் நாவில் (பேச்சில்) இனிமை இருந்தால்
எல்லா மனிதர்களும் உன்னை நேசிக்க முடியும் - அன்னை தெரசா
-----------------------------------------------------------------------------------

பிறக்கும்போதே யாரும்
மகிழ்ச்சியாய் பிறப்பதில்லை.
ஆனால் மகிழ்ச்சியாய் வாழும்
தகுதியுடனேயே பிறக்கிறார்கள்.
உன் மகிழ்ச்சியை ஏற்படுத்திக்கொள்ள நீயே முயற்சி செய்.
-----------------------------------------------------------------------------------

எழுந்து நடந்தால் இமயமலையும் நமக்கு வழி கொடுக்கும்
உறங்கிக்கிடந்தால் சிலந்தி வலையும் நம்மை சிறை பிடிக்கும்.
-----------------------------------------------------------------------------------

காயமில்லாமல் கனவுகள் காணலாம்
ஆனால் வலி இல்லாமல் வெற்றிகள் காண முடியாது.
-----------------------------------------------------------------------------------

உயரத்தில் செல்ல உயரத்தில் உள்ளவர்களை நோக்கிடு
உயரத்தில் சென்று தாழ்வில் உள்வர்களை நோக்கிடு
-----------------------------------------------------------------------------------

தோல்வி வந்தால் பொறுமை தேவை
வெற்றி வந்தால் பணிவு தேவை
எதிர்ப்பு வந்தால் துணிவு தேவை..
-----------------------------------------------------------------------------------

உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி உன் செயல்கள் இருக்கும்;
உன் செயல்களுக்கு ஏற்றபடி உன் வாழ்க்கை இருக்கும் ---------------- சாக்ரடீஸ்
-----------------------------------------------------------------------------------

முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை!
முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை!
முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை!
-----------------------------------------------------------------------------------

தோல்வி அடைவதற்க்கு பல வழிகள் இருக்கலாம்.
எனினும் உழைப்புதான் வெற்றி பெற ஒரே ஒரு வழி.
-----------------------------------------------------------------------------------

Wednesday 9 January 2008

தோல்வி கண்டு துவண்டுவிடுபவன் மனிதனா?

வாழ்வில் ஒவ்வொருவரும் தோல்வியை சந்திக்க கற்றுக்கொள்ள வேண்டும்। தோல்வி என்றாலே துவண்டு விடும் மக்களைத்தான் நான் அதிகமாக பார்த்து இருக்கின்றேன்.
அவர்கள் ஒவ்வொருவரும், தாங்கள் என்ன முயன்றார்களோ

அதுவே கிடைத்தாக வேண்டும்...

தோல்வி என்பதே இருக்கக் கூடாது.....

இதுதான் மக்கள் எதிர் பார்க்கிறார்கள்.

வாழ்க்கை என்பது போராட்டாங்கள் நிறைந்தது. போர்க்களத்தில் நாம் இறங்கி விட்டால் எதிர்க் காற்று பலமாக வீசும். இவை எல்லாம் பார்த்து துவண்டு விட்டால் என்ன சாதிக்க முடியும்.
சாதாரண குட்டையில் நீச்சல் போட்டவன் கடலில் என்ன செய்ய முடியும். இந்த குட்டையில் நீச்சல் பயின்ற ஒருவனுக்கும் கடலில் நீச்சல் பயின்ற ஒருவனுக்கும் நீச்சல் போட்டி வந்தால் யார் ஜெயிப்பார்கள் என்பதை நீங்களே புரிந்து கொள்ளலாம்.
சிற்பங்களை கண்டு வியப்புடன் பூரித்து நிற்கின்றான்... அதே சிற்பம் வைக்கப் பட்டு இருக்கும் ஒரு கல்லை அவன் சட்டை செய்வது கூட கிடையாது. காரணம் .....அந்த சிலையாக செதுக்கப் பட்ட கல் நல்ல உளி செதுக்களை தாங்கியது. சிற்பி அந்த கல்லை குடையும் போதும் உளியால் அதை குட்டிய போடும் அது வலியினை தாங்கிய காரணமே.

மனிதர்களில் எத்தனையோ பேர் தனது கடந்த கால வாழ்க்கையை நினைத்து கவலைபட்டவர்களாக இருக்கிறார்கள்। இது போல கடந்த கால வாழ்க்கையை சொல்லிச் சொல்லி புலம்புவதை நாம் நிறைய முறை பார்த்து இருக்கிறோம்.

இப்படி புலம்பிக் கொண்டே இருப்பவர்கள்....
அவர்களது கடந்த காலத்தை மட்டும் வீணடிக்க வில்லை ..
இப்போது இருக்கும் ...
அவர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கும் நிகழ காலத்தையும் வீணடிக்கிறார்கள்.

இப்படிப் பட்டவர்கள் தனது அனைத்து சக்தியும் வீனடிக்கின்றார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இவர்கள் எதிர்காலம் என்று ஒன்று இருப்பதாக நினைப்பதே இல்லை.. இதனால் இவர்கள் தங்களது வாழ்வில் முன்னேறாமல் ஒரு செக்கு மாடு எவ்வாறு இருந்த இடத்திலேயே சுற்றிக் கொண்டு இருக்கின்றதோ.. அது போல இவர்களும் வாழ்வில் முன்னேறாமல் இருப்பார்கள்...

நாம் இவ்வாறான மக்களிடம் இருந்து ஒரு உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும்.அந்த உண்மை கீழ் கண்டவாறு கொடுக்கப்பட்டு இருக்கின்றது...

'நமது கடந்த கால வாழ்க்கை நமக்கு பாடமாக இருக்க வேண்டுமே... தவிர எக்காரணத்தை முன்னிட்டும் நமக்கு பாரமாக இருக்கக் கூடாது"...

எனவே மனிதா.. தோல்விகளை கண்டு மனம் துவளாதே.இன்னும் எதிர்ப்புகளை சந்திக்க தயாராகிக் கொள். சோதனைகளை சாதனைகளாக்க கற்றுக் கொள்.வெற்றி நிச்சயம் உன் பக்கம்.

நன்றி: துறவி Saint