தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 
வாழிய செந்தமிழ்
புத்தாண்டு பத்து கட்டளைகள்
 
1. தேவை / அவசியம் இல்லாமல் ஆங்கிலத்திற்கு இடமில்லை. தமிழில் பேசுதல் இழுக்கு என்று கருதுவது நம் அழிவுக்கான பாதை.
விளக்கம் : தமிழர் இயக்குனர் சீமான் 
http://www.youtube.com/watch?v=lcAiBhnzDQk
2. தமிழீழ மக்களுக்கு நம்மால் முடிந்த ஆதரவு / உதவி. ( அவர்களை, நம் சொந்த சகோதர்களை, தமிழ் நாட்டிலேயே ''தீவிரவாதிகள்'' என்று சொல்வது நமக்குத்தான் அவமானம்)
3.கோக், பெப்ஸி புறக்கணிப்பு. என் மண்ணின் விவசாயிகள் வாழ, இளனீருக்கு ஆதரவு. 
( என்.ஆர்.ஐ க்கள் தாயகம் செல்லும் போது நினைவு கொள்க)
4. கருணாநிதி, ஜெயலலிதா இருவருக்கும் இனி வாக்களிப்பதிற்கில்லை. தமிழகத்திற்கு தேவை, புதியதோர் விடியல். சன், ஜெயா வுக்கு முற்றுப்புள்ளி. ( அவர்களின் அரை உண்மை, அரை பொய் செய்திகளை இனியும் நம்புவதற்கில்லை ) 
5.விஜய், பேரரசு படங்களை இனியும் மெச்சு கொட்டி பார்த்து, ரசித்து ?! நம்மை நாமே ''கேணயன்'' என்று சொல்லிக்கொள்வதற்கில்லை. கேளிக்கைகளில் ஆபாசங்களை காட்டி பணம் பறிக்கும் கும்பல்களுக்கு இடமில்லை.
6.ஊடகங்கள் தரும் செய்திகளை அப்படியே நம்ப மாட்டோம். ( ஹர்பஜன் விஷயத்தில் அவர்கள் செய்தது கேலிக்கூத்து. 'தேரி மா கி'' என்று சொல்லிய பின்னும் விடுதலை ஆனதை அவமானப்படாமல், 'வன்தே மாதரம்'' சொல்லி அவர்கள் கொண்டாடியது கேவலம்) ஒரு விஷயத்தை தலைகீழாகவே மாற்றிவிட்டார்கள். குறிப்பாக ஸ்டார் நியூஸ்.
7.தமிழை நம் அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்லும் முயற்சிகளுக்கு நம்மாலான உதவி,ஊக்கம்,ஆதரவு. 
http://tamilnation.org/literature/projectmadurai/intro.htm
8.''இனி ஒரு விதி செய்வோம்; அதை என்னாளும் காப்போம்.''
'' தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்''
மாதத்திற்கு ஒரு முறையாவது நம் ஏழை மக்களுக்கு நம்மால் முடின்த உதவி / கல்வி / ஒரு வேளை உணவு. சொன்த மக்கள் கிராமங்களில் பட்டினி சாவு கிடக்கும் பொழுது நாம் மூச்சு முட்ட மூன்று வேளை திண்று விட்டு தூக்கம் வராமல் புலம்புவது அபத்தம்.
( பட்டினிச்சாவுகள் எப்படி நிகழும் என்று ஒரு முறை எண்ணிப்பார்க்கவும்)
 
9.புத்தகம் படிக்கும் நல்ல பழக்கங்களை விட்டு விட்டு ஆர்குட்டிலும், ஃபேஸ்புக்கிலும் மணிக்கணக்கில் செலவிடுதல் விரயம். ( புத்தகம் படிக்கிற பழக்கமே இல்லை என்பதை கொஞ்சம் கூட சலனமில்லாமல் சொல்லும் இன்னொரு தலைமுறை உருவாகி வருவது உண்மை. எல்லாம் வளர்ப்பு முறை !)
 
11.'மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம்' இது கடமை ஆகி விட்டது. 
இனியும் அடுத்தவர்களை குத்தம் சொல்லி பயனில்லை. நாம் ஒன்றுபட்டு உருவாக்குவது தானே சமுதாயம்.மாற்றங்கள் நம்மிலிருந்து தொடங்கட்டும்.
வாழிய செந்தமிழ். வாழ்க நற்றமிழர்.
வாசகப்பிழை மன்னிதருளுக ! 
நன்றி: பச்சைத்தமிழன்
Monday, 14 April 2008
Subscribe to:
Comments (Atom)